2024 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருந்துகொண்டே இருக்கும். உறவுகள் விஷயத்தில் கவனம் தேவை. எல்லாவிதமான உறவுகளும் உங்களைவிட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இளைய சகோதர - சகோதரிகளிடம் கவனம் அவசியம். போக்குவரத்து, வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக சென்றுவாருங்கள். லிஃப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றில் பயணம் செய்யும்போது கவனமாக இருங்கள். யாரையும் நம்பாதீர்கள். அப்பா, அம்மா இருவரின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சொந்த தொழில் செய்பவர்களுக்கு அந்த தொழில் அந்தஸ்து கொடுக்கும். வருமானத்தை கொடுக்காது. கூட்டுத்தொழிலில் பாட்னருக்காக உழைக்க வேண்டிய சூழல் இருக்கிறது. மணவாழ்க்கையில் கணவன் - மனைவிக்கிடையில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருக்கின்றன. எது எப்படி இருந்தாலும் வேலை நன்றாக உள்ளது. வேலையில் எதிர்பார்க்கக்கூடிய முன்னேற்றம் என்பது இருக்கும். உங்களின் எதிரிகள் விஷயத்தில் உஷாராக இருங்கள். வெளியாட்களிடமும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். அவசரம் அவசியம் இருந்தால் தவிர கடன் வாங்காதீர்கள். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு சுமாராக இருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்தாலும் சுமாராகத்தான் இருக்கிறது. வாரம் முழுவதும் மகாலட்சுமியையும், அம்பாளையும் வழிபாடு செய்யுங்கள்.
