2024 ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் முயற்சிகள் அனைத்தும் சாதாரணமாக இருக்கும். சொத்துக்கள் விற்பனையாகவில்லை என்றோ, இடம், வீடு, ஊர் மாறுவது தள்ளிப் போய்க்கொண்டோ இருக்கிறது என்று கவலைப்பட வேண்டாம். இளைய சகோதர - சகோதரிகளால் மனவருத்தங்கள், மனக்குழப்பங்கள், நிம்மதியற்ற சூழல்கள் ஏற்படும். நெருங்கிய உறவுகள் மட்டுமட்டுல்ல நட்பு வட்டாரமும் அப்படித்தான் இருக்கும். அதனால் நண்பர்கள் விஷயத்திலும் பொறுமையாக, நிதானமாக இருங்கள். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. ஏதாவது ஒரு வேலை இருந்துகொண்டே இருக்கும். போட்டித்தேர்வுகள் எழுதி இருந்தால் வெற்றி பெறுவதிலும், இன்டர்வியூவில் கலந்து கொண்டிருந்தால் தேர்வு ஆவதிலும் சின்ன சின்ன தடைகள் இருக்கின்றன. மூத்த சகோதர - சகோதரிகளால் ஒருபக்கம் நன்மையும், ஒருபக்கம் அவர்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில்கள் செய்ய வாய்ப்புள்ளது. நீண்ட தூர ஸ்தல யாத்திரை அல்லது தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், நல்லதொரு பேச்சு, வருமானம் ஆகியவை இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பரவாயில்லை. ஆராய்ச்சி படிப்புகளை படிக்க நினைப்பவர்கள் தொடரலாம். இந்த வாரம் முழுவதும் பைரவர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.