2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். யாரையாவது நம்பி செயல்பட வேண்டிய காலமாக இருக்கிறது. அந்த நம்பிக்கை வீண் போகாது. யார் உங்களுக்கு சத்தியம் செய்திருக்கிறார்களோ அவர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்துகொள்வார்கள். சொந்த தொழில் உங்களுக்கு லாபகரமாக இல்லை. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. பணம், பொருள் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். அதில் கவனமாக இருங்கள். கூட்டுத்தொழிலில் உங்கள் பார்ட்னர் திருப்தியற்ற மனநிலையில் இருப்பார். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் குறைவு. எல்லாமே வெற்றியடைவது போன்று தோன்றினாலும், அவற்றிலும் தடைகள் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை, ஊர், இடம் ஆகியவற்றில் மாற்றங்கள் உண்டு. வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பாஸ்போர்ட், விசா, பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்-க்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் உங்களை விட்டு பிரிந்து போக வாய்ப்புள்ளதால் அவர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பொருளாதாரம் நன்றாக இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். இந்த வாரம் முழுவதும் தன்வந்திரி பகவான் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.