2024 ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணங்கள் கையில் இருந்தாலும், அதற்கு ஏற்ற செலவினங்களும் இருக்கின்றன. முயற்சிகள் பெரிய அளவில் இருந்தால்தான் வெற்றிபெற முடியும். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள நினைப்பவர்கள் தொடரலாம். அதில் வெற்றி பெறுவீர்கள். இந்த வாரத்தில் பெரிய அளவில் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் ஒருபுறம் தடையாக இருந்தாலும், இன்னொருபுறம் வெற்றியடையும். சொத்துக்களை விற்க நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். யாரையும் நம்புவதற்கான வாய்ப்புகள் இல்லை. இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. நெருங்கிய உறவுகளாலும் நற்பலன்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய முன்னேற்றங்கள் அத்தனையும் இருக்கின்றன. அதேபோன்று வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு, பணப்பயன் போன்றவற்றை எதிர்பார்த்து காத்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். போட்டித்தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். நல்லதொரு வேலையாட்கள் அமைவார்கள். சொந்த தொழில் சுமாராக இருக்கும். கூட்டுத்தொழிலில் இருவரும் திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். இந்த வாரம் முழுவதும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வார் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பைரவரை வழிபாடு செய்யுங்கள். ஏற்றம் பெறுவீர்கள்.

Updated On 25 Jun 2024 12:15 AM IST
ராணி

ராணி

Next Story