2025 ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது பெரிய அளவில் இருக்கிறது. எதிர்பாராத பயணம் குறிப்பாக இறைவழிபாடு அமைவதற்கான சூழ்நிலைகள் உள்ளன. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் கையில் பணம், தனம் இருக்கும். அதேநேரம் அதிகமான வருமானங்கள், செலவினங்கள் இரண்டும் இருக்கிறது. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடருங்கள். வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. ஆனாலும், எதிர்பார்த்த எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்பதால் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. உங்கள் காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு, அதற்கான வாய்ப்பு, அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இரண்டாம் திருமணத்திற்கும் முயற்சி செய்யுங்கள். உயர்கல்வி நன்றாக உள்ளது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். எதிர்பாராத பணவரவு, தனவரவு இருந்தாலும் அதுவும் முடங்க வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயரையும் நரசிம்மரையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 22 April 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story