2025 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இருக்கும். தொழிலில் பெரிய அளவில் லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இருக்காது. அதனால் அப்படியே தொடரவும். புதிய காதல் மலரும். ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படும். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம் இருந்தாலும் செலவினங்கள் இருக்கிறது. உங்கள் முயற்சிகள் தெய்வ அனுகூலத்தால் வெற்றியடையும். இறைவனுடைய அனுக்கிரகம், அனுகூலம் நிறைய உண்டு. நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். எதிர்பாராத பயணம் அந்த பயணத்தால் நன்மை, எதிர்பார்த்த செய்திகள், எதிர்பாராத செய்திகள் அத்தனையும் உங்களுக்கு சாதகமாக வருவதற்கான சூழ்நிலைகள் உண்டு. உங்கள் சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். கல்வி பரவாயில்லை. எது எப்படி இருந்தாலும் உங்களின் அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். வேலை பரவாயில்லை. மணவாழ்கை, மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் சிவன் வழிபாட்டை அதிகப்படுத்துங்கள்.

Updated On 15 April 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story