2025 ஏப்ரல் 08-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் காதல் திருமணத்தில் முடிவதற்கான சூழ்நிலைகள் உள்ளன. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும் அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கும். தொழில் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். பணம் கடன் கொடுத்தால் திரும்பி வருவதற்கான வாய்ப்பு இல்லை. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம்; உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. எதிர்பாராத எண்டெர்டெயின்மெண்ட், டூர், டிராவல் இருக்கிறது. கூட்டுத் தொழில் நன்றாக உள்ளது. கல்வி நன்றாக உள்ளது. வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. இருப்பினும் வேலையில் நீங்கள் எதிர்பார்த்த அத்தனை முன்னேற்றங்களும் உண்டு. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. எது எப்படி இருந்தாலும் உங்களின் அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். ரேஸ், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால் பார்த்து செய்யுங்கள். உங்கள் பணம், பொருள் மொத்தமாக முடங்கிக்கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோசம் இருக்கும். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் சிவன் வழிபாட்டை அதிகப்படுத்துங்கள்.
