2025 மார்ச் 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிர்பாராத மகிழ்ச்சி, சந்தோஷம், நன்மைகள் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. விற்பனையாகாத சொத்துக்கள் விற்பனையாகும். எதிர்பாராத முயற்சிகள் ஏதோவொரு விதத்தில் நன்மையாக முடியும். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள், நன்மைகள் உண்டு. உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் தாராளமாக செய்யுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கும் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். வெளிநாட்டு தொடர்புகள் அத்தனையும் நல்லவிதமாக அமையும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மாறும். வருமானம் உண்டு. இந்த வாரம் முழுவதும், முருகன் மற்றும் காளியை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள்.
