2025 பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதில் நிறைய தடைகள் இருக்கிறது. அவசரம், அவசியம் இருந்தால் ஒழிய புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்கள், பிரச்சினைகள் இருக்கிறது. நெருங்கிய உறவுகளை விட்டு பிரிந்து இருப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளன. உங்கள் சொத்துக்கள் விற்பனையாகாமல் இருந்தால் நல்ல விலைக்கு போகும். வீடு, இடம் மாற்றங்கள் உண்டு. புதிய இடங்கள், புதிய சூழ்நிலைகளில் வாழ்க்கை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அதேநேரம் வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ் எதிர்பார்ப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை நிமித்தமான இடமாற்றங்கள், அலைச்சல்கள் உண்டு. தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் இரண்டு தரப்பிலும் லாபத்தை அடைவீர்கள். உங்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷகரமாகவும் இருக்கும். உயர்கல்வி நன்றாக உள்ளது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். இந்த வாரம் முழுவதும், பைரவரையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்யுங்கள்.
