2025 பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இறைவனுடைய அனுகிரகம், அனுகூலம் உங்களுக்கு இருக்கிறது. உங்கள் சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். ஊர் மற்றும் இட மாற்றங்கள் உண்டு. பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. வேலை நிமித்தமாக எதிர்பாராத பயணம் இருக்கிறது. வேலையில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். தொழில் பரவாயில்லை. ஏதாவது ஒன்றில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல ரிட்டன்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தால் அது கிடைப்பதில் நிறைய தடைகள் இருக்கிறது. இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. வேலையில் நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் கிடைக்கும். கடன் வாங்க வேண்டாம். நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவான் மற்றும் தன்வந்திரி பகவானை வழிபாடு செய்யுங்கள்.
