2025 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் எண்ணம், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். நினைத்தது நடக்கும். உங்களை புதுப்பித்துக் கொள்வதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் உருவாகும். பி.ஹெச்.டி போன்ற ஆராய்ச்சி படிப்புகளை படித்துக்கொண்டிருந்தால் தேர்ச்சி பெறுவீர்கள். வெளிநாட்டில் சமூக அந்தஸ்துகள் கூடும். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்புகள், கிடைப்பதற்கான சூழ்நிலைகள் நிறைய உண்டு. மணவாழ்க்கையில் கவனமாக இருங்கள். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் உண்டு. இரண்டு பேருமே திருப்தியற்ற மனநிலையில் வாழ்க்கை நடத்துவதற்கான சூழ்நிலைகள் இருக்கிறது. இதேதான் உங்களின் பிசினஸ் பார்ட்னருக்கும். இருவரையும் சரியாக கையாளுங்கள். வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரை எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. கடன் வாங்குவதை தவிர்த்துவிடுங்கள். தொழிலில் பெரிய அளவில் கவனம் செலுத்துங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைப்பது மாதிரியான தோற்றம். அதுவும் சுமார். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 10 Feb 2025
ராணி

ராணி

Next Story