2025 பிப்ரவரி 04-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
புதிய முயற்சிகள் பெரிய அளவில் வேண்டாம். தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். உயர்கல்வி, ஆராய்ச்சி ஆகிய படிப்புகளை தொடர நினைப்பவர்கள் தொடருங்கள். வெளிநாட்டு தொடர்புகள் அத்தனையும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. அப்பா மற்றும் அம்மாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. நல்ல நண்பர்கள் அமைவார்கள். தொழில் பரவாயில்லை. மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷகரமாகவும் இருக்கிறது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரை ஏதாவது ஒரு வருமானம், சம்பாத்தியம் இருக்கிறது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து இருக்கிறது. வருமானங்கள் சுமார். இந்த வாரம் முழுவதும், ஆஞ்சநேயர் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.
