2025 ஜனவரி 21-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

புதிய முயற்சிகள் எடுப்பதாக இருந்தால் யோசித்து செயல்படுங்கள். நன்மையில் முடிய வாய்ப்புள்ளது. உங்கள் சொத்துக்கள் எதிர்பார்த்த விலைக்கு போக வாய்ப்புள்ளது. வீடு, இடம் மாற்றங்கள் உண்டு. இளைய சகோதர - சகோதரிகளுக்காக செலவு செய்வீர்கள். தொழில் சுமாராக இருக்கிறது. தேவையற்ற செலவுகள், விரயங்கள் இருக்கிறது. கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. வெளியூரிலோ, வெளிநாட்டிலோ முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. தொழில் சுமாராக இருந்தாலும் வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். எதிரிகள் யாராக இருந்தாலும் ஜெயிப்பீர்கள். நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் சிவன் கோயிலில் இருக்கும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 21 Jan 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story