2025 ஜனவரி 07-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யாராவது வருவார்கள். நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். அதற்கான சூழ்நிலைகள் உருவாகும். சொத்துக்கள் நல்ல விலைக்கு போக வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலில் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டுவிட்டு நடக்கும். திருமண வாழ்க்கையிலும் திருப்தியற்ற மனநிலை என்பது இருக்கும். பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரை வேலையில் மாற்றங்கள் உண்டு. வேலையில் நீங்கள் நினைப்பது கிடைக்கும். எதிர்பார்த்த முன்னேற்றங்கள், ப்ரோமோஷன்ஸ் ஆகியவற்றிற்கு வாய்ப்புகள் உண்டு. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு; அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் என அனைத்தும் இருக்கிறது. உயர்கல்வி நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும் சனிபகவான் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.