2024 டிசம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இறைவனுடைய அனுகூலம் கிடைக்கும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. விற்பனையாகாத சொத்துக்கள் இருந்தால் விற்பனையாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நன்மையாக முடியும். உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இளைய சகோதர - சகோதரிகளுக்கு சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள், வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடைபெறும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு பரவாயில்லை. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரிகளால் ஏற்றம் இருக்கிறது. வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், ஆஞ்சநேயர், பைரவர் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.