2024 டிசம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முயற்சிகள் வெற்றி பெறுவது போன்ற தோற்றம்; உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இது இரண்டும் கலந்து இந்த வாரத்தில் இருக்கிறது. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலை இல்லை என்ற சூழ்நிலை இல்லை. தனித்துவமாக தெரிய வாய்ப்புகள் இல்லை. உங்கள் வேலையில் பெரிய அளவில் கவனம் செலுத்துங்கள். தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்த வாய்ப்புகள் உள்ளன. கடன் வாங்கியாவது ஸ்டார்ட்டப் நிறுவனம் தொடங்க நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத செலவினங்கள் இருக்கின்றன. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடைபெறும். நீண்ட தூர பயணத்திற்கு வாய்ப்புகள் இருந்தால் கூட கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். இந்த வாரம் முழுவதும், ஆஞ்சநேயர் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 23 Dec 2024 5:24 PM IST
ராணி

ராணி

Next Story