2024 டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். நீங்கள் நினைப்பது வெற்றி அடையும். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில், எதிர்பார்த்த மாற்றம், முன்னேற்றம் இருக்கிறது. வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். பிரச்சினைகள், போராட்டங்கள், மனக்குழப்பங்கள் இருக்கும்போது யாராவது வந்து உதவி செய்வார்கள். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உதவி செய்வார்கள். விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். வீடு, இடம் மாற்றத்திற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் பரவாயில்லை. திருமணம் நடைபெறாதவர்கள் இன்னும் கொஞ்சம் காத்திருங்கள். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்கள் மட்டும் செய்யுங்கள். கணவன் - மனைவி உறவில் யாராவது ஒருவருக்கு பிரிவு அல்லது தேவையற்ற செலவினங்கள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அந்தஸ்து, புகழ் இருக்கிறது. வருமானங்கள் இல்லை. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம் உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களின் பணம், பொருள் முடங்கி கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். இந்த வாரம் முழுவதும், ஆஞ்சநேயர் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.
