2024 டிசம்பர் 03-ஆம் தேதி முதல் டிசம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வருமானங்கள் இருக்கும் அதே அளவுக்கு செலவுகளும் அதிகமாக இருக்கிறது. நீண்ட தூர பயணம் செல்ல திட்டமிடுங்கள். அது வெற்றி பெற வாய்ப்புள்ளது. உங்களுடைய எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக வந்து சேரும். பிரச்சினைகள், போராட்டங்கள் இருக்கும் பொழுது யாராவது வந்து உதவி செய்வார்கள். காரியங்கள் அத்தனையும் கைகூடும். முன்னேற்றத்திற்கான வழி வகைகளை ஆராயுங்கள். டாக்குமெண்டுகளில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். இளைய சகோதர - சகோதரிகளால் நன்மை, மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. உறவுகளால் நற்பலன்கள் உண்டு. எதிர்பாராத பயணம் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை, அதில் மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். தொழில் நன்றாக உள்ளது. இதுவரை திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடக்கும் அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இரண்டாம் திருமணத்திற்கும் முயற்சி செய்யலாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் பணம் முடங்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டு தொடர்புகள் நன்றாக உள்ளது. எதிர்பாராத என்டெர்டெயின்மெண்ட், டூர், டிராவல் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் தெய்வ அனுகூலம் என்பது இருந்துகொண்டே இருக்கும். இந்த வாரம் முழுவதும், சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பைரவரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 9 Dec 2024 9:31 PM IST
ராணி

ராணி

Next Story