2024 நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வருமானங்கள் இருக்கும் அதே அளவுக்கு சுப செலவுகளும் இருக்கிறது. இடம், வீடு, ஊர் மாற நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொத்துக்கள் எதிர்பார்த்த விலைக்கு போகும். அசையா சொத்துக்கள் வாங்குவீர்கள். கல்வி நன்றாக உள்ளது. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடருங்கள். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடக்கும் அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். வேலை வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கிறது. வேறு வேலை மாற நினைப்பவர்கள் மாறுங்கள். தேவையற்ற கடன்களை தவிருங்கள். பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் கண்டிப்பாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் அதுவும் கிடைக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய சனி பகவானை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 26 Nov 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story