2024 நவம்பர் 05-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையின் காரணமாக மாற்றங்கள் உண்டு. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். எது எப்படி இருந்தாலும் உங்கள் தொழிலை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளது. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. வேலை காரணமாக பயணம் உள்ளது. குழந்தைக்கான வாய்ப்புகள் உருவாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உள்ளது. நீங்கள் நினைப்பது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். வளர்ப்பு பிராணிகள் வாங்கி வளர்ப்பதாக இருந்தால் வளர்க்கலாம். பொருளாதாரத்தை பொறுத்தவரை வருமானம் இருக்கிறது. அதற்கு ஏற்ற செலவினங்களும் இருக்கின்றன. எவ்வளவு சம்பாதித்தலும் உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம் உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. விருந்தினர்கள் வீட்டிற்கு வருவார்கள். உங்கள் பிரச்சினைகளை தீர்க்க யாராவது வருவார்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. அம்மாவின் அன்பு, ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்லது நடக்கும். எந்த துறையில் பணியாற்றினாலும் திருப்தியற்ற மனநிலை இருக்கும். இந்த வாரம் முழுவதும், சிவன் வழிபாடு பிரதானமாக செய்யுங்கள்.
