2024 அக்டோபர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. பெரிய உடல் உழைப்பு இல்லாமல் வருமானங்கள் உண்டு. எதிர்பாராத பயணம் ஏதோவொரு விதத்தில் நன்மையாக முடியும். உங்களுக்கு பிரச்சினை இருக்கும்போது அதை தீர்ப்பதற்கு யாராவது வருவார்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உங்களின் சிந்தனைகள் பெரிய அளவில் இருக்கும். யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். எதிர்பாராத பயணம் இருக்கிறது. நினைத்த காரியங்கள் நடக்கும். எதிர்பார்த்த, எதிர்பாராத செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். உங்கள் வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வேலையை பொறுத்தவரை தனித்துவமாக தெரிய வாய்ப்புகள் இல்லை. வேலை வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கிறது. எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கிறது. போனஸ், இன்சென்டிவ் எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருந்தாள் வரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 29 Oct 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story