2024 அக்டோபர் 08-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சுமாரான அளவில்தான் வெற்றி பெரும். அனாலும் கூட உங்களுக்கு இறையருள், தெய்வ அனுகூலம் இருக்கிறது. வாழ்க்கையில் எப்போதுமே போராட்டங்கள், பிரச்சினைகள், மனக்குழப்பங்கள், நிம்மதியற்ற சூழ்நிலைகள் இருக்கும். அதையெல்லாம் தீர்த்து வைக்க யாராவது வருவார்கள். வேலையை பொறுத்தவரை நன்றாக இருந்தாலும், உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில் நிறைய தடைகள், பிரச்சினைகள் இருக்கின்றன. உயர் அதிகாரியும் ஒத்துழைப்பு கொடுக்க வாய்ப்புகள் இல்லை. எந்த துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும் உங்கள் வேலையில் கவனமாக இருங்கள். அலுவலகம் மாற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை செய்யுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தொழில் தகராறு; தொழில் நிச்சயமற்ற தன்மை ஆகியவை இருக்கும். அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டு விட்டு நடக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அம்மா மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பி.ஹெச்.டி, ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன் ஷிப்-க்கு விண்ணப்பித்திருந்தால் இந்த வாரம் வரும். அரசியல் வாழ்க்கை சுமாராக உள்ளது. விளையாட்டுத் துறையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு கௌரவம், புகழ், அந்தஸ்து, வருமானம் கூடும். எது எப்படி இருந்தாலும் உங்களின் எண்ணம், ஆசை, அபிலாஷைகள் பூர்த்தியாகும். இந்த வாரம் முழுவதும் பைரவர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 14 Oct 2024 9:53 PM IST
ராணி

ராணி

Next Story