2024 செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகளை பொறுத்தவரை வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கின்றன. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்பு வந்தால் ஜெயிப்பீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதி இந்த வாரம் ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். வேலை நன்றாக உள்ளது. பயப்பட தேவையில்லை. வேலையில் நிறைய சாதிப்பதற்கான கிரக நிலைகள் உள்ளன. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வளர்ப்பு பிராணிகள் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வளர்க்கலாம். சொந்த தொழில் சுமாராக இருக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னரும், நீங்களும் பிரிந்து இருப்பீர்கள். கல்வி நன்றாக உள்ளது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதில் தாமதம் ஏற்படும். அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால் பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. வருமானங்கள் சுமார். விளையாட்டுத் துறையில் இருந்தால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயரையும், பைரவரையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 10 Sep 2024 3:45 AM GMT
ராணி

ராணி

Next Story