2024 செப்டம்பர் 03-ஆம் தேதி முதல் செப்டம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுடைய பொருளாதார நிலைகள் பரவாயில்லை. எவ்வளவு பணம் வந்தாலும் செலவினங்கள் இருக்கிறது. எல்லாவிதமான உறவுகளையும் சரியாக வழிநடத்துங்கள். இல்லையென்றால் அந்த உறவுகளால் பிரச்சினைகள் இருக்கிறது. சொத்துக்கள் ஏதும் விற்பனை செய்தால் நல்ல விலைக்குப் போக வாய்ப்புகள் இல்லை. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்கள் பணம், பொருள் முடங்கிக் கொள்ள வேண்டிய வாரமாக இருக்கிறது. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. ஏதாவது ஒரு வேலை இருக்கும். ஆனாலும், அந்த வேலையில் திருப்தியற்ற மனநிலை என்பது இருக்கும். சொந்த தொழிலும் அவ்வளவு பிரமாதமாக இல்லை. எல்லாவிதத்திலும் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். அப்பா, அம்மா இருவரின் உடல்நிலையிலும் கவனம் தேவை. மணவாழ்க்கையும் சுமார். உயர்கல்வி பரவாயில்லை. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. அரசியல், விளையாட்டு துறை இரண்டிலும் இருப்பவர்களுக்கு சுமாரான காலம். அவசரம், அவசியம் இருந்தால் தவிர கடன் வாங்காதீர்கள். யாருக்கும் புதிதாக கடன் கொடுக்காதீர்கள். அவை திரும்பி வருவதற்கும் வாய்ப்புகள் இல்லை. கிரக நிலைகள் சுமாராக இருப்பதால் தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். இந்த வாரத்தில் குலதெய்வம், இஷ்ட தெய்வம் குறிப்பாக பெண் தெய்வ வழிபாடு உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கும்.

Updated On 9 Sept 2024 9:54 PM IST
ராணி

ராணி

Next Story