2024 அக்டோபர் 01-ஆம் தேதி முதல் அக்டோபர் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டுமே சுமாராக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். உங்கள் மணவாழ்க்கை ஓரளவுக்கு மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். வாய்ப்பு இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இந்த வாரத்தில் தேவையில்லாத பயணத்தை தவிர்ப்பது முக்கியம். உறவுகளை பலப்படுத்துங்கள். ஏனென்றால் எல்லாவிதமான உறவுகளோடும் தேவையில்லாத மனவருத்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தவரை உறவுகளோடு நட்பு பாராட்டுங்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வேலையை பொறுத்தவரை ஒருபுறம் பிரச்சினை, இன்னொரு புறம் வேலையை விடவேண்டிய சூழ்நிலை போன்ற அத்தனையும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள். வெளிநாடு, வெளி மாநிலங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால் விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்வதை தவிருங்கள். வேலையை பொறுத்தவரை ஏதோவொரு வேலை இருக்கிறது. முன்னேற்றங்கள் இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்கள் செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் போக்குவரத்து, வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது எச்சரிக்கையாக இருங்கள். யாரையும் முழுமையாக நம்புவதோ, அவர்கள் சொல்வதை கேட்பதோ வேண்டாம். வாரம் முழுவதும் மகாலட்சுமியையும், சிவன் கோயிலில் உள்ள அம்பாளையும் வழிபடுங்கள்.

Updated On 1 Oct 2024 9:16 AM IST
ராணி

ராணி

Next Story