2024 ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் நன்றாக இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்க்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார ரீதியாக பெரிய போராட்டங்கள் எதுவும் இல்லை. கையில் பணம், தனம் இருக்கும். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து செய்ய கூடிய தொழில் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. கல்வி நன்றாக உள்ளது. உடல் உழைப்பு இல்லாமல் சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை உங்களின் முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். அதேநேரம் சம்பள உயர்வு, பணி உயர்வுக்கும் வாய்ப்புகள் உள்ளன. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கண்டிப்பாக கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணங்கள் தவணை முறையில் வந்து சேரும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்ய வேண்டாம். எல்லாமே உங்களுக்கு ஓரளவு சாதகமாக இருப்பதால் எதற்காகவும் கவலைபட வேண்டாம். எதிர்பாராத நட்பு வட்டாரமும் உங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். இந்த வாரம் முழுவதும் விநாயகரையும், மகாலட்சுமியையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 5 Aug 2024 10:37 PM IST
ராணி

ராணி

Next Story