2024 ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பெரிய அளவில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்க கூடிய பணங்களை ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் தேவையில்லாத செலவினங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பெரிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு பிசினஸ் சுமாராக இருக்கும். இந்த வாரத்தில் ஆராய்ச்சி, பி.எச்.டி தொடர்பாக படிக்க நினைப்பவர்கள் படிக்கலாம். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன் ஷிப் ஆகியவற்றிற்கு விண்ணப்பித்திருந்தால் இந்த வாரம் வரும். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக அமைவதுடன், அங்கிருந்து எதிர்பார்க்கக்கூடிய செய்திகள் நன்மையாக முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருப்பது போன்ற ஒரு தோற்றம், ஆனால், வருமானம் இல்லை. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். அப்பாவால் நன்மைகள் ஏற்படும். வேறு அலுவலகம் மாறவேண்டும், பேப்பர் போட வேண்டும் என்று நினைப்பவர்கள் போடலாம். வெளியூர், வெளிநாட்டிற்கு டிக்கெட் புக் பண்ண நினைப்பவர்கள் செய்யலாம். உங்களின் ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். புதிய நட்பு கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் விநாயகரையும், பெருமாளையும் வழிபாடு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

Updated On 23 July 2024 9:41 AM IST
ராணி

ராணி

Next Story