பணவரவுக்கு பஞ்சம் இருக்காது. வேறு மதம், மொழி அல்லது இனம் சார்ந்த நண்பர் மூலமாக, பண வரவுகள், தொழில் அமைப்புகளை அடையாளம் காட்டுதல் அல்லது பால்ய பருவத்தில் அறிமுகமாகி தொடர்பு விட்டுப்போன ஒருவர் மீண்டும் வாழ்க்கையில் வந்து இணைந்து நட்பாகவோ உறவாகவோ மாறுவர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் நல்லதொரு மாற்றம் நடக்கும். குறிப்பாக, இதுவரை கணவர் குறித்து அல்லது குடும்பப் பொறுப்புகளில் தன்னுடைய தலைமையை பற்றி மாமனார், மாமியார் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்ற கவலை மற்றும் மன அழுத்தங்களில் இருந்த பெண்களுக்கு இது யோக மாதமாக அமையும். வீட்டிலேயேயும், வெளியேயும் வேலை செய்கிறேன் என்கிற பெண்களை வீட்டிலுள்ளோர் புரிந்துகொள்வர்.

Updated On 12 July 2023 12:55 PM IST
ராணி

ராணி

Next Story