2025 ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. நீங்கள் ஆசைப்பட்டது அனைத்தும் நடப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளன. உங்கள் வேலையில் நீங்கள் சாதிக்க நினைக்கும் அனைத்தும் நடக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ், போனஸ், அரியர்ஸ் போன்றவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு அவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. போட்டித் தேர்வுகள் எழுதி இருந்தால் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். கணவன் - மனைவி இருவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். கடன் வாங்கியாவது சொந்தமாக இடம், வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். தொழில் நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 22 April 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story