2025 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை எந்த துறையில் பணியாற்றினாலும் பரவாயில்லை. வேலை பளு, டென்ஷன், பிரச்சினைகள் ஆகியவையும் இருக்கும். இனம் காண முடியாத வியாதிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகள் செய்யும் பொழுது ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும் இறுதியாக வெற்றி பெறுவீர்கள். தொழில் சுமாராக இருக்கும். பெரிய அளவில் முதலீடு செய்தாலும் லாபம் கைக்கு வருவதில் நிறைய தடைகள் இருக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். அவருக்காக நீங்கள் உழைப்பீர்கள். அவர் உங்களை விட்டு பிரிந்து போவார். மணவாழ்க்கையில் கணவன் - மனைவிக்கிடையில் பிரிவு, பிரச்சினைகள், போராட்டங்கள் அல்லது இருவரில் யாராவது ஒருவருக்கு விரயம், வைத்தியச் செலவுகள் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், பிரம்ம தேவர் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
