2025 ஏப்ரல் 08-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலையை பொறுத்தவரை எந்த துறையில் பணியாற்றினாலும் நன்றாக உள்ளது. வேலையில் உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். எல்லாவிதமான மானிட்டரி பெனிஃபிட்ஸ் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டால் தேர்வு செய்யப்படுவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கடன் கிடைக்கும். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். இந்த வாரத்தில் உங்கள் வெற்றி பெரிய அளவில் இருக்கும். அப்பா, அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தில் மிக மிக கவனம் தேவை. பொருளாதார நிதி நிலைமைகள் பரவாயில்லாமல் இருக்கும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். ரேஸ், லாட்டரி, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் உங்கள் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் செய்யுங்கள். இல்லையென்றால் பொறுமையாக இருங்கள். கல்வியிலும் கவனமாக இருங்கள். இந்த வாரம் முழுவதும், சிவன் கோயிலில் இருக்கும் பிரம்ம தேவர் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
