2025 பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. நோய் மற்றும் கடனில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் காதல் வெற்றி அடைந்து திருமணத்தில் முடியும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். நல்ல ஒரு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுதவிர டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் செய்பவர்களுக்கு வருமானங்கள் பரவாயில்லை. லாட்டரி, டிஜிட்டல் கரன்சி, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரை வேலையில் நிறைய போராட்டங்கள், பிரச்சினைகள் இருக்கிறது. யார் என்ன வேலை செய்தாலும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். உடன் பணியாற்றுபவர்களிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள். வேலையில் எதிர்பார்க்காத டார்ச்சர், மனக்குமுறல்கள் இருக்கிறது. அதனால் பொறுமையாக உங்கள் வேலையை செய்யுங்கள். திருமணம் இதுவரை நடைபெறவில்லை என்றால் நடக்கும் அல்லது அது குறித்து பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளது. உடற்கல்வியில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும், சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மா மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
