2025 பிப்ரவரி 04-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் எந்த துறையில் பணியாற்றினாலும் உங்கள் வேலையில் கவனமாக இருங்கள். மற்றவர்கள் முன்னேறி சென்றாலும் நீங்கள் பொறுமையாக இருங்கள். பார்க்கும் வேலையை விட்டு வெளியே வரவேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலைகள் உள்ளன. பணி உயர்வு, சம்பள உயர்வு போன்ற எந்த விஷயத்தையும் உங்கள் வேலையில் எதிர்பார்க்காதீர்கள். பணிச்சுமை, கடன், நோய் ஆகியவை குறைய வாய்ப்புகள் உள்ளது. கையில் பணம், தனம், பொருள் என்பது இருக்கும். உங்கள் காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது. எதிர்பாராத எண்டெர்டெயின்மெண்ட், டூர், டிராவல் ஆகியவை இருக்கிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, வருமானம் நிறையவே உண்டு. ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், டிஜிட்டல் கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டும் சுமார். இந்த வாரம் முழுவதும், நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவான் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
