2025 ஜனவரி 28-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
மகிழ்ச்சி, சந்தோஷம், பிரச்சினைகள் இரண்டும் கலந்து இருக்கிறது. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை எதிர்பாராத செலவினங்கள், விரயங்கள், நஷ்டங்கள், யாருக்காவது பணம் கொடுத்து உதவ வேண்டிய சூழ்நிலைகள் அல்லது நம் கண்முன்னே பணம், பொருள் பறிபோன மாதிரியான காலகட்டங்கள் ஆகிய அனைத்தும் இருக்கிறது. பேச்சை குறையுங்கள். குழந்தைகளால் தேவையற்ற பிரச்சினைகள், மனவருத்தங்கள் இருக்கிறது. அதனால் அவர்கள் விஷயத்திலும் கவனம் தேவை. பெரிய அளவில் முயற்சிகள் எதுவும் வேண்டாம். தேவையில்லாத குழப்பங்கள், சிந்தனைகளை தவிருங்கள். இறை நம்பிக்கையை கூட்டுங்கள். டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் எல்லாவிதமான யூக வணிகங்களிலும் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். எல்லாமே லாபம் கொடுப்பது மாதிரியான தோற்றம். ஆனால், லாபம் இல்லை. பணம், பொருள் முடங்க வாய்ப்புள்ளதால் அவற்றில் கவனம் செலுத்துங்கள். வேலை, வாய்ப்புகளில் கவனமாக இருங்கள். நாம் பார்க்கும் வேலையை விட்டு வெளியே வருவதற்கான வாய்ப்பு அல்லது வெளியேற்றப்படுவதற்கான சூழ்நிலைகள், வேலையைப் பற்றி இனம் புரியாத கவலை, பீதி, மனக்குழப்பம் என அத்தனையும் இருக்கிறது. அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.