2025 ஜனவரி 21-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதையும் முழுமையாக அனுபவிப்பதற்கான வாரமாக இந்த வாரம் இல்லை. குழந்தைகள் இருந்தால் அவர்களால் பிரச்சினை, அவர்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான சூழ்நிலை, அவர்களால் மனத்துன்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஆகியவை உள்ளன. அதனால் கவனமாக இருங்கள். தேவையில்லாத எண்டெர்டெயின்மெண்ட் வேண்டாம். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். எல்லாவிதமான யூக வணிகங்களும் லாபத்தை கொடுப்பது மாதிரியான தோற்றம். ஆனால், பணமாகவோ, பொருளாகவோ லாபம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. டிரேடிங், லாட்டரி, ரேஸ், போன்ற எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம் இருந்தாலும் செலவுகள், விரயங்கள், வைத்தியச் செலவுகள் ஏற்பட்டு விலகும். கணவன் - மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். வேலை, வாய்ப்புகள் சிறப்பாக இல்லை. வேலையில் கவனம் செலுத்துங்கள். பார்க்கும் வேலையை விட்டு வெளியே வரணும் அல்லது வெளியேற்றப்பட வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் இருக்கிறது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். இந்த வாரம் முழுவதும், சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மா மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
