2025 ஜனவரி 14-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ஒருபக்கம் மகிழ்ச்சி, சந்தோஷம். இன்னொரு பக்கம் அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை, அதனால் மனகஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. உங்களுடைய பணம் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். உங்கள் வேலையில் பெரிய அளவில் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் வேலையை விட்டு வெளியே வருவதற்கு அல்லது வெளியேற்றப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வேலை குறித்த ஒரு பயம், அழுத்தம், டென்ஷன் இருந்துகொண்டே இருக்கும். அதனால் எந்த துறையில் பணியாற்றினாலும் மிக மிக கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டங்கள். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். தொழில் சுமாராக இருக்கிறது. லாபம் வருவது மாதிரியான தோற்றம்; ஆனால், லாபம் இல்லை. இந்த வாரம் முழுவதும், விநாயகர் வழிபாடு மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவின் ஆராதனையை அதிகப்படுத்துங்கள்.
