2025 ஜனவரி 07-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
மகிழ்ச்சி, சந்தோஷம் பெரிய அளவில் இருக்கிறது. உடல் உழைப்பு இல்லாமல் சம்பாதிக்க வாய்ப்புகள் உருவாகும். வேலையில் கவனமாக இருங்கள். நீங்கள் பார்க்கும் வேலையை விட்டு வெளியே வர வேண்டும் அல்லது வெளியேற்ற பட வேண்டிய சூழ்நிலைகள் இருக்கிறது. நீண்ட விடுப்பு எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எந்த துறையில் பணியாற்றினாலும் கவனமுடன் இருங்கள். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடாதீர்கள். புதிய காதல் விஷயங்கள், ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. முறிந்த காதல் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. பெரிய அளவில் செய்யக்கூடிய தொழில் சுமாராக இருக்கிறது. லாபம் வருவது மாதிரியான தோற்றம்; ஆனால், லாபம் இல்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷகரமாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பெரிதாக லாபம் ஒன்றும் இல்லை. எதிர்பாராத டூர், டிராவல் அதேநேரம், என்டெர்டெயின்மெண்ட் அதிகமாக இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.