2024 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிர்பாராத டூர், டிராவல் அதேநேரம், என்டெர்டெயின்மெண்ட் அதிகமாக இருக்கிறது. உங்கள் காதல் வெற்றியடையும். புதிய காதல் மலரும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வரவுகள் நிறைய இருந்தாலும், செலவுகளும் இருக்கிறது. பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். தொழில் சுமாராக இருக்கும். லாபம் வருவது மாதிரியான தோற்றம். ஆனால், லாபம் இல்லை. பணம், தனம் இருந்தால் கூட, உங்கள் பணம் மொத்தமாக மாட்டிக்கொள்ளும் அல்லது முடங்கிக்கொள்ளும். உடல் உழைப்பு இல்லாமல் சம்பாதிப்பீர்கள். எந்த துறையில் பணியாற்றினாலும் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இல்லை. அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். நண்பர்களால் நற்பலன்கள் குறிப்பாக, ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. இந்த வாரம் முழுவதும், சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்ம தேவர் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.