2024 டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொத்து, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் திருப்தியற்ற மனநிலையில் இருந்தால் அவற்றையெல்லாம் தவிர்த்து விடுங்கள். பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. கையில் பணம், தனம், பொருள் இருக்கும். இருக்கிறது என்பதற்காக யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் கையில் இருக்கும் பொழுது சொத்துக்கள் வாங்க வேண்டும் என்றால் வாங்குங்கள். பயணம் செய்வதை தவிருங்கள். உறவுகள் தொடர்பான விஷயங்களை கவனமாக கையாளுங்கள். உறவுகளை விட்டு பிரிந்து இருப்பீர்கள். இளைய சகோதர - சகோதரிகள் விஷயத்திலும் கவனம் தேவை. விவசாயம் சார்ந்த துறைகளில் இருந்தால் வருமானம், லாபம் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த சேல்ஸ் மற்றும் வருமானம் இருக்கிறது. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றி பெறும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து இருக்கிறது. ஆனால், வருமானங்கள் சுமார். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதில் அடக்கி வாசியுங்கள். இந்த வாரம் முழுவதும், சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மா மற்றும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 10 Dec 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story