2024 டிசம்பர் 03-ஆம் தேதி முதல் டிசம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மெண்ட் இருக்கும். காதல் விஷயங்கள் நன்மையாகவும், வெற்றியுடனும் இருக்கும். உங்கள் காதல் திருமணத்தில் முடியும். பொருளாதார பிரச்சினைகள் ஏதும் இல்லை. பெரிய அளவில் தொழில் தொடங்க வேண்டாம். ஏற்கனவே தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துங்கள். போக்குவரத்து, வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக சென்று வாருங்கள். எது எப்படி இருந்தாலும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் உங்களுக்கு நிறைய இருக்கும். குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். வேலையில் கவனம் செலுத்துங்கள். எப்படிப்பட்ட வேலையில் இருந்தாலும் நிச்சயமற்ற தன்மை, நிம்மதியற்ற சூழ்நிலைகள் இருக்கிறது. வேலையில் பணிச்சுமை, அழுத்தம், டென்ஷன் என்பது இருக்கும். யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுக்காதீர்கள். அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை ஏற்படும். நண்பர்களால் மகிழ்ச்சி என்பது இருந்துகொண்டே இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்தால் சுமாரான முன்னேற்றத்தை கொடுக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் மட்டுமின்றி எதிரிகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் முழுவதும் துர்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 9 Dec 2024 9:34 PM IST
ராணி

ராணி

Next Story