2024 நவம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலை நன்றாக உள்ளது. பெரிய அளவில் உடல் உழைப்பு இல்லாமல் சம்பாத்தியம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. உங்கள் கையில் பணம், தனம், பொருள் என்பது இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய முயற்சிகள் ஏதோவொரு விதத்தில் நன்மையாக முடியும். நீங்கள் நம்பியவர்களால் நன்மைகள் உண்டு. நீங்கள் எதிர்பார்ப்பவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களை நீங்கள் டெவலப் செய்வதற்கான சூழ்நிலைகள் உள்ளன. தேடுதல் என்பது அதிகமாக இருக்கும். எல்லாவிதமான முயற்சிகளையும் எடுங்கள். அவை அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளன. நீங்கள் நம்பி இருப்பவர்களை தொடர்பு கொள்ளுங்கள். நேரடியாக பேச நினைப்பவர்களிடம் பேசுங்கள். விற்பனையாகாமல் இருக்கும் சொத்துக்கள் விற்பனையாக வாய்ப்புள்ளது. வீடு, இடம் மாற நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புள்ளது. புதிய சூழல்கள், புதிய இடங்களில் வாழ்க்கை நடத்துவதற்கான சூழல்களை கிரகங்கள் உங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். அந்த காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து இருக்கிறது. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள்.
