2024 நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. ஆனாலும், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். ஒருபக்கம் உங்களின் காரியங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் வெற்றி பெறுவது போன்ற ஒரு தோற்றம். இன்னொரு பக்கம் நிறைய தடைகள் இருக்கிறது. அதனால் எதிர்கால திட்டங்கள் குறித்து ஏதும் யோசனை இருந்தால் கொஞ்சம் தள்ளி வையுங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். யாரையும் நம்பாதீர்கள். தேவையில்லாமல் கவலைப்படாதீர்கள். மனதளவில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நன்றாக உறங்குங்கள். தூக்கம் மிகவும் முக்கியம். வீடு, இடம் மாற வாய்ப்புள்ளது. உங்கள் காதல் விஷயங்களில் சின்ன சின்ன தடைகள் இருந்தாலும், முறிந்துபோன காதல் மீண்டும் சேரும். சொந்த தொழில் பெரிய அளவில் கைகொடுக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் உங்கள் மீது கொஞ்சம் திருப்தியற்ற மனநிலையில்தான் இருப்பார். மணவாழ்க்கை சுமாராகத்தான் உள்ளது. பொருளாதார ரீதியாக கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 12 Nov 2024 10:11 AM IST
ராணி

ராணி

Next Story