2024 அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் சுமார். எவ்வளவு சம்பாதித்தாலும் செலவினங்கள் என்பது இருக்கும். இந்த வாரத்தில் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் தேவையில்லாத விரயம், நஷ்டம், வைத்தியச் செலவுகளை சந்திப்பீர்கள். தொழில் சுமாராக இருக்கும். கூட்டுத்தொழில் சிறப்பாக இல்லை. வேலையை பொறுத்தவரை வேலையை விட்டு வெளியே வர வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டிய காலமாக உள்ளது. அதனால் எந்த துறையில் பணியாற்றினாலும் உங்கள் வேலையை கவனமாகவும், திருப்திகரமாகவும் பாருங்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வீடு மாற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. தொடர்புகொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. கல்வியை பொறுத்தவரை பரவாயில்லை. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் அது வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்பாவுடைய அன்பு, ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் பைரவரையும், பிரம்மாவையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 15 Oct 2024 12:02 AM IST
ராணி

ராணி

Next Story