2024 அக்டோபர் 08-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். சொந்த தொழில் சுமாராக இருக்கிறது. தொழில் தகராறு; தொழில் நிச்சயமற்ற தன்மை என்பது இருந்துகொண்டே இருக்கிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டுவிட்டு நடக்கும். உங்கள் காதல் விஷயங்கள் ஏதோவொரு விதத்தில் வெற்றியடையும். புதிய காதல் மலரும். ஏற்கனவே உங்கள் காதல் பிரேக் அப் ஆகி இருந்தால் மீண்டும் ரீயூனியன் ஆக வாய்ப்புள்ளது. வேலையை பொறுத்தவரை கவனம் செலுத்துங்கள். செய்யும் வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். வேறு வேலைக்கு முயற்சி செய்யவோ; வேறு அலுவலகம் மாறவோ வேண்டாம். இந்த வாரம் கிரக நிலைகள் சாதகமாக இல்லை. உயர் அதிகாரிகளால் பிரச்சினை; உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு தராமை போன்ற பிரச்சினைகளும் இருந்துகொண்டே இருக்கும். உயர்கல்விக்காக அப்ராடு மற்றும் வெளி மாநிலங்கள் செல்ல நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள்; வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இருக்கிறது. அப்பாவுடைய உடல் ஆரோக்கியத்தில் மிக மிக கவனம் தேவை. ஷேரில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. யாரையும் நம்பி இருக்காதீர்கள். நீங்கள் நம்பியவர்கள் துரோகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. உறவுகளால் தேவையற்ற மனவருத்தங்கள், பிரச்சினைகள் உண்டு. இந்த வாரம் முழுவதும் பிரம்மாவையும், சிவனையும் பிரதானமாக வழிபாடு செய்யுங்கள்.
