2024 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீண்டதூர பயணம் போக வாய்ப்புள்ளது. வேலையை பொறுத்தவரை வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். வெளிநாட்டுக்கு போக முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் இந்த வாரத்தில் வரும். எதிர்பாராத வகையில், முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. உங்கள் கையில் பணம், தனம் இருந்தால்கூட செலவினங்களும் அதிகமாக இருக்கிறது. உறவுகள் மற்றும் இளைய சகோதர - சகோதரிகள் விஷயத்தில் தேவையற்ற மனக்குழப்பங்கள், நிம்மதியில்லாத சூழல்கள் ஏற்பட்டு விலகும். தேவையில்லாத பயணத்தை தவிர்த்து விடுங்கள். அந்த பயணத்தால் மனவருத்தங்கள் ,செலவினங்கள்தான் இருக்கின்றன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், லாபம் இல்லை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழில் நன்றாக உள்ளது. வெளிநாட்டு தொடர்பில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நார்மலான வருமானம், சம்பாத்தியம் இருக்கிறது. இந்த வாரத்தில் யாரையும் நம்பாதீர்கள். அது மிகவும் முக்கியம். இந்த வாரம் முழுவதும் பிரம்மா மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 23 Sept 2024 11:04 PM IST
ராணி

ராணி

Next Story