2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ஆசைகள் பூர்த்தியாகும். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து கூடும். எந்த துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும் உங்கள் வேலையில் கவனமாக இருங்கள். உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் யாரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வாய்ப்புகள் இல்லை. இதுதவிர வேலையில் மன அழுத்தம், வருத்தங்கள் என்பது இருக்கும். அதனால் எல்லோரையும் அனுசரித்துபோவது நல்லது. வீடு மாற நினைத்து அமையவில்லை என்றால் வருத்தப்பட வேண்டாம். சொத்து விற்பதில் பிரச்சினை இருந்தால் கவலைப்படாதீர்கள். நிதானம் என்பது மிக அவசியம். கல்வியை பொறுத்தவரை சிறப்பாக இல்லை. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருந்தால் உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. லாபம் இல்லை. விவசாயத்திலும் லாபம் என்பது இல்லை. உங்கள் காதல் விஷயங்களில் நிறைய பிரச்சினைகள், போராட்டங்கள் இருக்கின்றன. பிரேக் அப் ஏற்பட வாய்ப்புள்ளது. விட்டதை பிடிப்பதற்கான வாரமாக இல்லாததால் ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி இருக்கிறது. வருமானங்கள் சுமார். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள், அரசாங்க உதவிகள் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. பெரிய அளவில் முயற்சி செய்பவர்கள் அடக்கி வாசியுங்கள். இந்த வாரம் முழுவதும் முருகனையும், அம்பாளையும் தரிசனம் செய்யுங்கள்.