2024 அக்டோபர் 01-ஆம் தேதி முதல் அக்டோபர் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலை நன்றாக உள்ளது. புதிதாகவோ அல்லது பார்க்கும் வேலையை விட்டுவிட்டோ வேலை தேடுபவர்களுக்கு, நிச்சயம் வேலை கிடைக்கும். வருமானங்கள் நன்றாக உள்ளது. கையில் பணம், தனம் இருக்கிறது. கிரக நிலைகள் நன்றாக உள்ளதால் முதலீடு செய்யுங்கள். ஆராய்ச்சி, பி.எச்.டி பண்ண நினைப்பவர்கள் படிக்கலாம். ஏற்கனவே படித்துக் கொண்டிருந்தாள் தேர்ச்சி பெறுவீர்கள். பி.ஆர். கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். உங்கள் முயற்சிகளில் தடைகள் இருக்கிறது. அதனால் கூடுதல் கவனம் தேவை. உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்கள், பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். அதனால் உறவுகளை வலுப்படுத்துங்கள். விவசாயம் செய்பவர்களுக்கு நன்மை, லாபம், வருமானம் உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. இந்த வாரம் ஷேர் மார்க்கெட் போன்ற எல்லாவிதமான யூக வணிகங்களும் பரவாயில்லாமல் உள்ளதால் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. பிரிந்த காதல் மீண்டும் சேரும். உங்களின் இந்த காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். தேவை இருந்தால் மட்டும் கடன் வாங்குங்கள். இந்த வாரம் முழுவதும் பிரம்மாவையும், சிவனையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 1 Oct 2024 9:14 AM IST
ராணி

ராணி

Next Story