2024 செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்களுக்கான வெற்றி கண்டிப்பாக இருக்கிறது. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. அதே சமயம் வேலையை விட வேண்டும், வேலையில் இருந்து மாற வேண்டும், விடுப்பு எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். இது அத்தனையும் நடக்கும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட் வேண்டாம். டிரேடிங்கில் முயற்சி செய்ய வேண்டாம். மியூச்சுவல் ஃபண்ட், ரேஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பொறுமையாக இருங்கள். லாட்டரி விழுந்தால் யோகம் கிடைக்குமா? என்றால் இல்லை. எந்தவிதமான யூக வணிகங்களும் நமக்கு சாதகமாக இல்லை. அதனால் இந்த வாரம் பொறுமை அவசியம். உங்களின் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களுடைய பணம், பொருள் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். விட்டதை பிடிக்க வேண்டும் என்ற மன நிலைகளை மாற்றி கொள்ளுங்கள். உயர்கல்விக்காக வெளிநாடு போக நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். ஆராய்ச்சி படிப்புகளை தொடர நினைப்பவர்கள் தொடருங்கள். ஏற்கனவே படித்துக்கொண்டு இருப்பவர்களும் தேர்ச்சி பெறுவீர்கள். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்-க்கு விண்ணப்பித்திருந்தால் வரும். குழந்தைகளால் தேவையற்ற செலவினங்கள் இருக்கின்றன. அவர்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மா மற்றும் மகாலட்சிமியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 24 Sept 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story