2024 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். அதற்கான கிரக நிலைகள் உங்களுக்கு இருக்கிறது. சனி உங்களின் 7-ஆம் இடத்தை பார்ப்பதால் காதல் விஷயம், ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்பு, புதிய காதல் மலர வாய்ப்பு ஆகியவை உண்டு. கையில் பணம், தனம், பொருள் ஆகியவை இருக்கும். உங்கள் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி அடைய வாய்ப்புகள் இல்லை. எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுங்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். எல்லோரையும் நம்புவது போல் இருக்க வேண்டும். ஆனால், யாரையும் நம்பாதீர்கள். பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள். இளைய சகோதர - சகோதரிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். ஷேர் மார்க்கெட்டில் பெரிய அளவில் முதலீடு செய்திருந்தால் அடக்கி வாசியுங்கள். பணம் வரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. வேலையை பொறுத்தவரை நிறைய பிரச்சினைகள், தடைகள் இருக்கிறது. உடன் பணியாற்றுபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். வெளியில் சொல்ல முடியாத அளவுக்கான பிரச்சினைகளை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதுபோன்ற விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் முருகனையும், பிரம்மாவையும் தரிசனம் செய்யுங்கள்.

Updated On 13 Aug 2024 9:21 AM IST
ராணி

ராணி

Next Story