2024 ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் பரவாயில்லை. உங்களின் வருமானத்திற்கு தகுந்த செலவினங்கள் இருந்துகொண்டே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் இருக்கின்றன. சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். பெரிய அளவில் முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம். எல்லாவிதமான உறவுகளையும் மெயின்டைன் பண்ணுங்கள். இளைய சகோதர - சகோதரிகள் விஷயத்திலும் கவனமாக இருங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. லாபம் இல்லை. உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். புதிய காதல் மலரும். அந்த காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் உங்களின் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் மட்டும் முதலீடு செய்யுங்கள். தொடர்ந்து நோயால் அவதிப்பட்டு வந்தால் அதில் இருந்து விடுபடுவீர்கள். பெரியளவில் கடன் இருந்தால் அது குறைந்து மீண்டும் புதிய கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. வேலையில் உயர் அதிகாரிகள், உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு தர வாய்ப்பில்லை என்பதால் அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் கிருஷ்ணரை வழிபாடு செய்யுங்கள்.
